உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வேளாண் பட்ஜெட் நேரலை: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம்.

மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.

2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும்; நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடினத்தைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும்.

பருத்தி சாகுபடி பெருக்கத்தை அதிகரிக்க 14.20 கோடி நிதி ஒதுக்கீடு.

வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர ரூ.1,775 கோடி ஒதுக்கீடு.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை:

வேளாண் பட்ஜெட்: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=Ps3iGpda_txUNOsf

புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதலுக்காக ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.

ப்ளம்ஸ், பேரிக்காய் தோட்டங்களை புதுப்பிக்க, உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.30 லட்சம் நிதி.

கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம்.

அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தகவல் மையங்கள் அமைக்கப்படும்.

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.

விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பயிர்களை காக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின் வேலைகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

டிராக்டர்கள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்படும்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடர்பான தொழில்நுட்ப கையேடு தயார் செய்யப்பட்டு அனைத்து கள அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் பகிரப்படும்.

பலா, மிளகாய், மல்லிகை, கறிவேப்பிலை போன்ற தோட்ட பயிர்களின் தொகுப்பு முறை சாகுபடியினை ஊக்குவிக்க தோட்டக்கலை நிபுணர்களால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

பாரம்பரிய மருத்துவம் அதிகரித்துள்ளதால், மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட, இயற்கை இடுபொருள் செயல் விளக்கம் அமைக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

மரவள்ளிக்கிழங்கில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.

பேரிச்சையில் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகளை பயிரிடுவதற்காக ரூ.9.40 கோடி நிதிஒதுக்கீடு.

பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து, அந்த ரகங்களை ஊக்குவிக்கவும் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

10,000 ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ள, 7 லட்சம் தரமான தென்னை நாற்றுக்கள் விநியோகம் செய்யப்படும்.

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு; பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.

வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளை பார்க்க: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு முதலீட்டு கடனுக்கான, வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 43 கோடி நிதி ஒதுக்கீடு.

தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விதை பரிசோதனை நிலையங்களுக்கு NABL தரச்சான்று வழங்கப்படும்.

ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

ரூ.16.13 கோடி பலாவில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்முறை ஏதுவாக பராமரிப்புக் கூட்டுதலுக்கான மையம்.

10 பொருட்களின் புவிசார் குறியீட்டிற்காக ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ₹30 இலட்சம் ஒதுக்கீடு.

100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளான் கண்காட்சிகள் நடத்த 9 கோடி நிதி ஒதுக்கீடு.

எஞ்சிய நஞ்சு மதிப்பீடு பரிசோதனை கட்டண மானியத்திற்கு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு.

பசுந்தீவன ஊடுபயிர் செய்து, பால் உற்பத்தியை உயர்த்த 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்.

மீன் வளர்ப்போரின் வருவாயை உயர்த்துவதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு, இடுபொருள் மானியம் மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் பட்ஜெட் - என்னென்ன அறிவிப்புகள்?

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளை பார்க்க: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களின் மொத்த சாகுபடி இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

உணவு தானிய உற்பத்தி 116 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மானிய விலையில் தொடர்ந்து விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளை தானியங்கி மையமாக்க ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு.

வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்த ரூ. 5 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“உழவர்சந்தைகளில் விற்பனை செய்வதைப் போன்று தரமான வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்

செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு..!

பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு..!

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2024-2025-ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்.” எனத் தெரிவித்தார்.

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பண்ணைக்குட்டைகள், கசிவுநீர் குட்டை, புதிய குளங்கள் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு.

பனை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

இலவச மின் இணைப்புக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக மின்வாரியத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சி தணிப்பிற்கான சிறப்புத் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு 2024 - 2025ம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகள் 1,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வழங்கப்படும்.

வேளாண் பட்ஜெட் நேரலை: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

பாரம்பரிய உணவு வகைகள் பாதுகாக்கப்படும்.

பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

வாழை , பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும்.

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி மத்திய மானிய நிதி ஒதுக்கீடு.

இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணத்தொகை 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

வேளாண் பட்ஜெட் நேரலை: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் இதற்காக ₹208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்.

பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு.

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்; சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.

வேளாண் பட்ஜெட் நேரலை: https://www.youtube.com/live/EGFFj619CPo?si=IXjlj_1e3hvOiiwg

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது-வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது.

இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.

• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

Built with LogoFlowershow