TN Budget 2024
2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: தமிழக பட்ஜெட்
It has been announced in the budget that 8 lakh concrete houses will be built in rural areas by the year 2030 in Tamil Nadu.
In the financial year 2024-25, one lakh houses will be constructed in the rural areas of Tamil Nadu at a cost of Rs.3.5 lakh each.
மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி.
”மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
ஆறு மாத காலப் பயிற்சி இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தற்போது மத்தியப் பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”.
மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரி படிப்புக்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்!
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் உரை: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில், வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும்.
மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்.
சென்னை பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முழு பட்ஜெட் உரை: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
"காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்"
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
பட்ஜெட் உரை: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கப்படும் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மகளிர் இலவச பேருந்து பயணம் மலைப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி, வைகை, நொய்யல் நிதிகளை புனரமைக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி; ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்"
தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 ஏக்கர பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்.
தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும்; ரூ.120 கோடியில் அமைக்கப்படும் சிப்காட் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடியில் புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்; புதிய ஜவுளி பூங்காக்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகம்.
தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறுமையை அகற்றிட முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
முழு பட்ஜெட் உரை: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
மாற்றுத்திறனாளிகள் வேலை மானியம்.
500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் தொழிற்துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக பங்களிப்பை கொண்டிருப்பதும், மாநிலத்தின் தொழிற் சூழலமைப்பின் பாலினப் பன்முகத் தன்மையும் முற்போக்கான முதலீட்டாளர்கள் பலரை தமிழகத்துக்கு ஈர்க்கின்றன.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையை பார்க்க: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை!
சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் கல்வி நிலையங்கள் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.
மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப்பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழக் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
கோவையில் தகவல் தொழில் நுட்பபூங்கா 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
பட்ஜெட் உரையை பார்க்க: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,212 கோடி நிதி ஒதுக்கீடு.
LIVE: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கட்டட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்படும்.
6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு.
நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு.
தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு.
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி ஒதுக்கீடு.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூ.120 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
LIVE: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
‘நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
ரூ.1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை.
வடசென்னையை மேம்படுத்த ரூ.1,946 கோடி ஒதுக்கீடு.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூ. 3,050 கோடி நிதி ஒதுக்கீடு.
உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு.
2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
LIVE: https://www.youtube.com/live/vpUTOyTycuo?si=U-ojY9DmZBmAVFOM
நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.
தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.
பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.
2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.